
தமிழ்நாட்டில், வேலை செய்யும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகன திட்டம் கடந்த இரன்டு ஆண்டு முன்பு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, பலர் பயன் அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டில் பணிக்கு செல்லும் 8-ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு உட்பட்ட ஏழை மகளிருக்கான, அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வரின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க பட்டு வருகிறது. இதற்கான காலகெடு வருகிற 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலக் கெடுவை பயன்படுத்தி, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் உழைக்கும் மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவுறுத்தியுள்ளார். தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் இலவசமாகவும், இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment