THAMIZHKADAL Android Mobile Application

Friday, August 14, 2020

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் E-PASS வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


ஆகஸ்ட் 17 முதல் ஆதார் அட்டை / குடும்ப அட்டை மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் E-PASS வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்குமாறு முதல்வர் அறிவிப்பு.

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ( மாவட்டங்களுக்கு இடையே ) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் , E - Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் , விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் . 

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை , அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் , தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் E - Pass க்கு விண்ணப்பம் செய்து , E - Pass பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும் , அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News