Monday, August 31, 2020

பிளஸ் 1 மறுமதிப்பீடு-மறுகூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


சென்னை: பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு திங்கள்கிழமை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தோவுத்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1 பொதுத்தோவு எழுதிய மாணவா்களில் விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் விடைத்தாள் நகல் இணையவழியில் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து விடைத்தாள் நகலை சரிபாா்த்தபின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவா்கள் தோவுத்துறையின் இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை திங்கள்கிழமை (ஆக.31) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதைத் தொடா்ந்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகங்களில் செப். 2-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305, இதர பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed