Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 3, 2020

பிளஸ் 2 மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள்: விரைவில் டவுன் லோடு செய்து தர ஏற்பாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் கட்டமாக, 297 வீடியோ பாடங்கள் டவுன் லோடு செய்து தர, ஏற்பாடு நடந்து வருகிறது.ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 10 வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசின் இலவச பாடப் புத்தகங்கள் கடந்த மாதம், சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது. 

மேலும், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு பள்ளிக்கல்வி துறை சார்பில், வீட்டு பாடங்கள் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக அப்போது, 136 வீடியோ பாடங்கள், லேப்டாப்புக்கு ஹைடெக் லேப் மூலம் டவுன்லோடு செய்து தரப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, வீடியோ பாடங்கள் விரைவில், டவுன் லோடு செய்து தர ஏற்பாடு நடந்து வருகிறது.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகள் திறக்காததால், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கல்வி தடைபடாமல் இருக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கல்வி தொலைக்காட்சி இணைந்து தயாரித்த, 297 வீடியோ பாடங்கள் தயார் நிலையில் உள்ளன. அதை பள்ளியில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், லேப்டாப்பில் டவுன் லோடு செய்து கொள்ள வேண்டும். 

பிறகு, தங்கள் பள்ளிகளில், மேற்கண்ட பாடப்பிரிவு மாணவர்களை அழைத்து, அவர்களது லேப்டாப்பில் பதிவு செய்து தர வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு, 20 மாணவர்கள் வீதம் பள்ளிக்கு அழைக்க வேண்டும். டவுன்லோடு செய்த பிறகு, லேப்டாப்பில் பாடங்கள் சரியாக உள்ளதா என, பார்த்த பிறகே மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வி துறை இயக்குனரகத்தில் இருந்து, வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில், இரண்டாம் கட்ட வீடியோ பாடங்கள், பிளஸ் 2 மாணவர்களுக்கு டவுன்லோடு செய்து தரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment