Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்


வங்கிகளில், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, வரும், 20ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில், வரும், ௩1ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. ஆனாலும், '100 சதவீத ஊழியர்களுடன், வங்கிகள் வழக்கமான சேவையில் ஈடுபடும்' என, தமிழக வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு வங்கியான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செயல்பாட்டு வழிமுறையை வெளியிட்டுள்ளது.

தற்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சிலர் தொற்றால் இறந்துள்ளனர். வங்கிகள், 100 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல செயல்பட்டால், தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, வங்கி வணிக நேரத்தை, காலை, 11:00 முதல், பகல், 2:00 மணி வரை என, குறைக்க வேண்டும்; 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.ஊரடங்கின் போது, அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்களுக்காக, சிறப்பு பஸ் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 20ம் தேதி, தமிழகம் முழுதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment