Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 12, 2020

ஐ இ எஸ் 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது; செப்டம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம்!


யுபிஎஸ்சி (UPSC) செவ்வாயன்று இந்திய பொருளாதார சேவைகள் (IES) 2020 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் செப்டம்பர் 1, 2020 அன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை 2020 செப்டம்பர் 8 முதல் 14 வரை திரும்பப் பெறலாம்.

2020 அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு நடத்தப்படும்.

2020 இந்திய பொருளாதார சேவை தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் தோராயமான எண்ணிக்கை 15 ஆகும்.

பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ. 200 ஆன்லைன் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்திய பொருளாதார சேவைக்கு விணணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் / பயன்பாட்டு பொருளாதாரம் / வணிக பொருளாதாரம் / பொருளாதார அளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அகமதாபாத், ஜம்மு, பெங்களூரு, கொல்கத்தா, போபால், லக்னோ, சண்டிகர், மும்பை, சென்னை, பாட்னா, கட்டாக், பிரயாகராஜ், டெல்லி, ஷில்லாங், டிஸ்பூர், சிம்லா, ஹைதராபாத், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும்.

No comments:

Post a Comment