Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

கல்லூரிகளில் 2,020 விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம்!

தமிழகம் முழுவதும் கலை , அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2018 - 19 ம் ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் 1,883 கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன் கூடுதலாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2019-20ல் 2,653 காலி பணியிடங்களில் உதவி பேராசிரியர் நியமிக்கப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஆண்கள் கல்லூரிகளில் 1,416 கவுரவ விரிவுரையாளர்களும் , மகளிர் கல்லூரிகளில் 666 கவுரவ விரிவுரையாளர்களும் , ஆண்கள் கல்வியியல் கல்லூரிகளில் 25 கவுரவ விரிவுரையாளர்களும் , மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் 13 கவுரவ விரிவுரையாளர்களும் அடங்கும் , இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் உள்ள I15 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,020 விரிவுரையாளர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இத்தேர்வில் தற்போது பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவும் அரசின் உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment