THAMIZHKADAL TODAY NEWS

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக-28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் - கல்வித்துறை உத்தரவு


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக-28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சேர்க்கையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் வரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதன் முறையாக தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 119 அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்பம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.

அந்தவகையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel