Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

தகுதி சான்றிதழ்களுடன் 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள் - கட்டுரை : மாநிலத் தலைவர் பி. கே. இளமாறன்..


60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின்

மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-

மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் 2009-ல் கொண்டுவந்தபோது தேர்வு முறையில் பலமாற்றங்கள் செய்யபட்டது. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்.

அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிர்ணயம் செய்யப்பட்டது. 2012 ல் சொற்ப எண்ணிக்கையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அனைவரும் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் 2013 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரே அரசாணையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யபட்டார்கள். அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இச்சூழலில் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழும் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களின் ஆசிரியர் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தகுதியானோருக்கு ஆசிரியர் பணி வழங்க ஆவனச்செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.மேலும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தபடும் NET,SLET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றால் அச்சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக இருப்பது போன்று, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழும் மாற்றவேண்டும். தற்போது வாழ்வாதாரம் சீரமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஆசிரியர் தகுதித்தேர்ச்சி சான்றிதழின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்ற காலவரையறையினை ரத்துசெய்து, வாழ்நாள் சான்றிதழாகமாற்றி வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவுடன் வேண்டுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment