Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 7, 2020

செப்டம்பர் முதல் திறக்கப்படுகிறதா பள்ளிகள்? - மத்திய அரசு ஆலோசனை


நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவுள்ள நிலையில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளாக் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் நடைபெறாததால் பல மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கியுள்ளன. இடஹி தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கபடும் என்பது தெரியாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி செப்டம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள்ளாக 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் 15க்கு பிறகு 6 முதல் 9 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஆகஸ்டு இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களே பள்ளி திறப்பது குறித்தும் முடிவு செய்யலாம் எனவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment