Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 30, 2020

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடக்கம்.!

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இன்று முதல் அதன் விண்ணப்ப பதிவு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வழக்கமாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பப்பதிவை www.gct.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் டான்செட் நுழைவு தேர்வில் எம்பிஏ, எம்சிஏ படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கட்ஆப் முறைப்படி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment