Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

தொண்டை வலிக்கு மருந்தாகும் இஞ்சி- மஞ்சள் தேநீர்!


இஞ்சி, மஞ்சள், மிளகு வைத்து தயாரிக்கும் மூலிகை தேநீர் உடல்நலத்திற்கு அதிக பலன்களை தரக்கூடியது.

பருவகால மாற்றங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க தொடங்கும். வெயில், குளிர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

குறிப்பாக நம்மை சுற்றி தொற்றுநோய் பாதிப்பு இருக்கும் சமயத்தில் நமது உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வீட்டில் இயற்கை முறையில் தயாரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 

அவ்வப்போது மழை பெய்து வருவதால், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். டீ என்றால் பெரும்பாலானோருக்கு ரொம்ப பிடிக்கும். 

அதிலே உங்கள் ஆரோக்கியத்திற்கும் உதவும் மூலிகை தேநீர்களும் உள்ளன. அந்த வகையில் இஞ்சி மற்றும் மஞ்சள் வைத்து நீங்கள் வீட்டிலேயே மூலிகை தேநீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள்
இஞ்சி
மிளகுத்தூள்
தேன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

அதன்பிறகு இஞ்சி, மஞ்சள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இஞ்சி சாறு தண்ணீரில் நன்றாக இறங்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

அதன்பிறகு இந்த தேநீரை வடிகட்டி, தேன் கலந்து சூடாக குடிக்கவும். தேனை கொதிக்க வைக்க கூடாது என்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்.

இந்த தேநீரை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மருத்துவ குணங்கள்:

இஞ்சி- இதில் பாக்டீரிய மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. வயிறு சம்பந்தமான தொந்தரவுகளில் இருந்து விடுபட பயன்படுகிறது. செரிமானத்தை எளிதாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சள்- இதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. பழங்காலம் முதல், கிருமிநாசினி போல் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் மஞ்சளுக்கு உண்டு.

மிளகு- இதில் பாக்டீரிய எதிர்ப்பு பண்பு காணப்படுகிறது. தொண்டை வலி, இருமல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு மிளகுதான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பும் மிளகுக்கு உண்டு.

No comments:

Post a Comment