Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 15, 2020

உணவுக்கு பின் பழங்களை உட்கொள்ளலாமா?..


காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்று பலர் சொல்லி நாம் கேட்டு இருப்போம். வீட்டிலும் அனைத்து அம்மாக்களும் உடல் நலத்திற்காக அதிக பழங்களை உண்ண சொல்லி நம்மை வருப்புடுத்தியதும் உண்டு. அமேரிக்காவில் வேளாண்துறை அறிவிப்பின்படி காய் மற்றும் பழங்கள் நமது ஒரு வேளை உணவில் பாதி இடம் வகிக்க வேண்டும். ஆனால் பழஙகளில் அதிக இனிப்பு இருப்பதால் ஒரு சில நேரத்தில் மட்டுமே பழங்களை எடுப்பது சிறந்தது.

பழங்களில் அதிக சத்துகள் இருந்தாலும் உங்கள் உணவுக்கும் பின் பழம் உண்பது ஏற்கத்தக்கது இல்லை. உணவு உண்ட பிறகு சாப்பிட்டால் கார்போஐடிரேட், இனிப்பு மற்றும் பேக்டரியா சேர்வதால் ஜீரண சக்தியை குறைத்து விடும். அது மட்டுமின்றி பழத்தின் மொத்த ஊட்டச்சத்தை நம் உடல் எடுத்துக்கொள்ளாது; அதனால் உணவு உண்டு குறைந்தது 30 நிமிடம் கழித்தே பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் எந்த நேரத்தில் பழம் சாப்பிட்டால் நல்லது?

படேல், உணவு நிபுணர், உலகளாவிய மருத்துவமனைகள் மும்பை பரிந்துரைப்படி, "காலை எழுந்தவுடன் தண்ணீர் பருகியப்பின் பழம் அருந்துவது சிறந்தது. வெறும் வைத்ததில் பழங்களை எடுத்துக் கொண்டால் அது உங்கள் உடலை டிடாக்ஸ் செய்யும். அதை தாண்டி காலை மற்றும் மதிய உணவு இடைவெளியில் பழங்களை உண்ணுவதும் சிறந்ததே"

சில சமயம் உணவுக்கு முன் எடுத்துக்கொண்டால் நாம் அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும். மேலும் பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அதிக நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்

முக்கியமாக இரவு நேரத்தில் படுக்கைக்கு முன் பழங்கள் உண்ண கூடாது. அதிக இனிப்பு இருப்பதால் உங்கள் குளுக்கோஸ் அளவை அதிகரித்து இரவில் வெகு நேரம் கண் முழிக்க வைக்கும். படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன் உண்ணுவது சிறந்தது.

No comments:

Post a Comment