Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 'ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்' குறித்த அடிப்படை பயிற்சி வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் மின்னணு ஆளுமை பிரிவின் கீழ், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கின்றனர். 

ஜூன் மாதம் முதல், பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கான முன்பதிவு நடந்தது. தற்போது, மாணவர் சேர்க்கை நடக்கிறது.பயிற்சி காணொளி மூலம் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, அதற்கான அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. 

காணொளி மூலம் நடக்கும் இந்த வகுப்பில் மாணவர்கள், 'ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்' (செயற்கை நுண்ணறிவு) குறித்த தங்களின் புதிய யோசனைகளை தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதில், மாநில வாரியாக, சிறப்பாக உள்ள முதல் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். 

அடுத்தகட்ட பயிற்சியில் தேசிய அளவில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த படைப்பாளிகளாக பாராட்டுப்படுவர். இதில் http://responsibleaiforyouth.negd.in/ என்ற இணையதளத்தில், சென்று பதிவுகளை மேற்கொள்ளலாம். 

பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்வதற்கு, ஆக.,15ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி குறித்த கூடுதல் தகவல்களுக்கு, 87782 01926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment