Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 19, 2020

வேலைவாய்ப்பு பயிற்சிக்கு 'ஆன்லைன்' பதிவு

வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க, மத்திய அரசின் 'கவுசல் பான்ஜி' செயலியில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இளம் தலைமுறையினரின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி மாநில அளவில் வழங்குவதற்கு, 'தீன் தயால் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தை கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வேலைவாய்ப்பில்லாத இளம் ஆண் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாநில அளவில் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமான, 'கவுசல் பான்ஜி' என்ற செயலியையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில், வேலைவாய்ப்பு தேவையுள்ள இளம் ஆண் மற்றும் பெண்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில், ஒன்றியம் வாரியாக, மகளிர் திட்ட பணியாளர்கள், வேலைவாய்ப்பில்லாத இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் விபரங்களை பதிவு செய்ய துவங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக மகளிர் குழுவினரின் குடும்பங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் உள்ளவர்களின் குடும்பங்களில் உள்ள இளைஞர்களின் பட்டியல்கள் சேகரிக்கின்றனர்.

இந்த செயலியில், இளைஞர்களின், பெயர், படிப்பு, வங்கிக்கணக்கு பதிவு, வேலைவாய்ப்பின் நிலை உள்ளிட்ட விபரங்களை பெற்று, மகளிர் திட்ட பணியாளர்கள் பதிவு செய்கின்றனர்.

No comments:

Post a Comment