Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 3, 2020

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்!



யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 9 தனியார் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களை இணைத்து வரும் 31-ம் தேதிக்குள்ளாக தேர்வுக்குழுவுக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என்றும் ஹோமியோபதித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment