Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 5, 2020

உஷார்! ஆன்லைனில் பொருள் வாங்கும் போது இதையெல்லாம் பார்க்க வேண்டும்!!


தற்போது நேரடியாக சென்று பொருள் வாங்குவதைவிட ஆன்லைனில் தான் மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போது பல்வேறு விஷயங்களை கவனிப்பது அவசியம்.

நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், 'லோகோ' சரியான இடத்தில் உள்ளதா என்பதை இணையத்தில் நம்பத்தக்க பக்கங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள். 

அச்சு அசல் அதே போல் இருந்தாலும் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங்கின் போது கேஷ் ஆன் டெலிவரி வசதியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. பொருள்களைச் சரிபார்த்து பின் பணம் செலுத்துவது நன்று. 

இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கோ, மொபைலுக்கோ தகவல் அனுப்பப்படும். 

அந்த தகவலைப் பொருள் கைக்கு வரும்வரை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். 

விலை உயர்ந்த மின்சாதன பொருள்களை வாங்கும்முன் துறை சார்ந்தவர்களிடம் இந்த ஆன்லைன் தளத்தில் வாங்கலாமா என்று விசாரித்தபின் வாங்குவது நல்லது.


அவசர கதியில் ஆர்டர் செய்வது பெரும்தவறு. எப்போதுமே ஆர்டர் செய்யும்போது "assured" என்ற முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். 

மின்சாதன பொருள்களை 15 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம். 

நீங்கள் பதிவு செய்த நொடியிலிருந்தே அந்த கால அவகாசம் தொடங்கிவிடும். உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆர்டர் செய்யும்போது பிற வாடிக்கையாளர்கள் என்ன கருத்து பதிவிட்டுள்ளனர் என்பதை பார்ப்பது நல்லது. அதே போல் ரேட்டிங் பார்ப்பது அவசியம்.

No comments:

Post a Comment