Search This Blog

Saturday, August 15, 2020

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

0 comments


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோக்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளாகும்.

பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்பம் இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை 1.53 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனா். அதில், 1.23 லட்சம் மாணவா்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனா்.

இந்நிலையில் விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆகஸ்ட் 16) நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து விண்ணப்பித்த மாணவா்களுக்கான சமவாய்ப்பு எண்கள் ஆக.21-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment