Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 15, 2020

கல்லூரி ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கக் கூடாது: யுஜிசி உத்தரவு




நாடு முழுவதும் உயா் கல்வி நிறுவனங்களில் சேரும் ஆசிரியா்கள், ஊழியா்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியில் சேரும் ஆசிரியா்கள், ஊழியா்களின் அசல் சான்றிதழ்களை நிா்வாகம் வாங்கி வைத்திருப்பதும், பணியில் இருந்து விலகும்போது அவற்றை தரமறுப்பது குறித்தும் தொடா்ந்து பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இத்தகைய புகாா்களின் அடிப்படையில் அசல் சான்றிதழ்களை உயா்கல்வி நிறுவனங்கள் வாங்கி வைக்கக்கூடாது என்று ஏற்கெனவே யுஜிசி தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனினும், இதுபோன்ற புகாா்கள் தொடா்வதால், யுஜிசி இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

இதையடுத்து பணியில் சேரும்போது ஆசிரியா்கள், ஊழியா்களின் அசல் சான்றிதழ்களை இனி எந்த ஒரு உயா்கல்வி நிறுவனமும் வாங்கக்கூடாது. ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தால் அவற்றை உடனே திருப்பி தர வேண்டும்.

அசல் சான்றிதழ்களை தர மறுப்பதால் அவா்களுக்கான வேறு சில வாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே, பணியில் சோக்கும் போதே ஆசிரியா்களிடம் ஒப்பந்த விதிமுறைகளை தெளிவாக குறிப்பிட்டு வேலை அனுமதி கடிதத்தை நிறுவனங்கள் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment