Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

கொசுவை எப்படி விரட்டலாம் ..இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!



கொசு தொல்லை பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசு மூலம் பல நோய்கள் பரவி வருகின்றது. அப்படிப்பட்ட கொசுவை எப்படி விரட்டலாம் என்பது தான் யாருக்கும் தெரியாது.

கடைகளில் விற்கும் காயில்களை வாங்கி பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் புகையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அந்த காயில்களில் இருந்து வரும் புகை ஏற்ப்படுத்துகிறது.

இதோ இந்த இயற்கையான வழியை பயன்படுத்தி கொசு உங்கள் வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

1. வேப்ப எண்ணெய் 3 ஸ்பூன்
2. கற்பூரம் ஒரு பாக்கெட்
3. பச்சை கற்பூரம் சிறிதளவு.
4. பிரியாணி இலை

செய்முறை:

1. வேப்ப எண்ணெய் கற்பூரம் மற்றும் பச்சை கற்பூரம் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

2. பிறகு பிரியாணி இலையை எடுத்து அதன் இருபுறமும் கலக்கி வைத்த எண்ணெயை தடவி எரியவிடவும்.

3. அப்பொழுது அந்த புகையானது வீடு முழுக்க பரவும். கற்பூரத்தின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது அதுபோல இந்த வாசனை வந்த இடத்தில் கொசுக்கள் அண்டாது. மேலும் இந்த வாசனை ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை தீர்க்க வல்லது.

மேலும் நீங்கள் இந்த எண்ணெயை வைத்து விளக்கு ஏற்றலாம். இந்த விளக்கில் இருந்து வரும் புகை கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும் மேலும் நுரையீரல் பிரச்சினைகளையும் தடுக்கும்.

1 comment: