Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 12, 2020

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மதிப்பெண் நோட்டில் எழுத வேண்டிய தேர்வு விதி


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 004010/ஜெ1/2020 நாள் : 25.3.2020 உத்திரவின்படி

( கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் ) அனைத்துவகைப்பள்ளிகளில் 2019 - 2020 கல்வியாண்டில் தொடர்ந்து பள்ளியில் பயின்றுவந்த 1 முதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் பதிவேட்டில், CCE பதிவேடுகளில் , வகுப்பாசிரியர்கள் பதிவேட்டில் உள்ள Formative (a) க்கு 20 மதிப்பெண்கள், Formative (b)க்கு 20 மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்யவும். Summative தேர்வு நடத்தாததால் அந்தக் கலங்களில் (கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள் - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி) என எழுதவும். குறிப்பு கலத்தில் ஒவ்வொரு மாணவர் பெயருக்கு நேராக தேர்ச்சி என எழுதவும.
தேர்வு விதி
*************
தமிழக அரசு அறிவிப்பின்படி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஒழுங்குமுறைகள் 2019 - 2020 கல்வியாண்டில் தொடர்ந்து பயின்று வந்த 1முதல் 8ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது .

என எழுதுமாறு அனைத்துவகைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment