Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 31, 2020

பணியாளர்களின் திறமை பரிசோதிக்க அரசு உத்தரவு


அரசு துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களின் திறமை குறித்து மறு ஆய்வு நடத்தும் படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து கூறப்படுவதாவது: ஊழல் பணியாளர்கள் மற்றும் திறமையைற்ற பணியாளர்களை கண்டறியவும், பொது நலனுக்காகமுன் கூட்டியே ஓய்வு பெறவும் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்களின் சேவை பதிவுகளை மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 

பணியாளர்அடிப்படை விதி 56(ஜே) மற்றும் 56 (ஐ) மற்றும் 1972 ம் ஆண்டின் மத்திய அரசின் சிவில் சர்வீஸ் (ஓய்வூதியம்) விதி 48(1- b) ன் கீழ் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் கூறி இருப்பதாவது: 

அரசு ஊழியர்களின் சேவையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டுமா என்பதைக் கண்டறியும் நோக்கில் அவ்வப்போது அரசு ஊழியர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும்,இது கட்டாய ஓய்வு திட்டத்தில்இருந்து வேறுபட்டது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment