Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 14, 2020

என்னென்ன நோயாளிகள் என்னென்ன உணவுகளைத் தவிர்க்கணும்

''கேன்சர் அதிகரிக்க, இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கம்தான் காரணம்,'' என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் கிருபா சங்கர்.புற்று நோய் குறிப்பாக எந்த உறுப்புகளை பாதிக்கிறது?தலை முதல் கால் வரை எந்த உறுப்புகளையும் பாதிக்கலாம். குறிப்பாக ஆண்களுக்கு, வாய், நுரையீரல், வயிற்றுப்பகுதியில் வருகிறது. 

பெண்களுக்கு மார்பு, கர்ப்பவாய் பகுதிகளில் வருகிறது.கேன்சர் நோயின் அறிகுறிகள் பற்றி சொல்லுங்களேன்?தொடர்ச்சியான காய்ச்சல், வெள்ளை மற்றும் தட்டை அணுக்கள் குறைதல், உடலில் நெறி கட்டிகள் வருதல், எடை குறைதல் உள்ளிட்டவை ரத்த வகை புற்று நோய்க்கான அறிகுறிகள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவது, காம்பில் நீர் வடிதல் ஆகியவை மார்பக புற்று நோய்களின் அறிகுறிகள். 

நுரையீரல் புற்று நோய் என்றால், தொடர் இருமல், சளி, மூச்சு திணறல் இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். இந்த நிலையில், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.கடந்த, 20 ஆண்டுகளாக புற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?

இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கம்தான் காரணம். புகை, மது, அதிக உடல் எடை, உள்ளிட்ட காரணங்களும் உள்ளன. கேன்சர் வராமல் தடுக்க, இந்த தீய பழக்கங்களை விட வேண்டும்.

மோசமான உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். குறிப்பாக, தந்துாரி மற்றும் கிரில் சிக்கன், அடுப்பில் கருகிய உணவு பண்டங்கள், புட் கலர் சேர்த்த ஐட்டங்கள், பிரசர்வேட்டிவ் புட் ஐட்டங்களை சாப்பிட கூடாது.சரி...எந்த கெட்ட பழக்கமும் இல்லாத குழந்தைகளுக்கு, புற்று நோய் வருவது ஏன்?

மரபணு மாற்றம் காரணமாகவும், மரபு வழியாகவும் வருகிறது. மரபு வழியில் வருவது ஐந்து சதவீதம் தான். எதனால் வருகிறது என, தெரிந்த சில புற்று நோய்களுக்கு, தடுப்பு மருந்துகள் உள்ளன.

காரணம் தெரியாத நோய்களுக்கு மருந்து இல்லை.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால், எந்த அளவுக்கு பலன் கிடைத்துள்ளது?உறுப்பு மாற்று சிகிச்சையை, எல்லா புற்றுநோய்க்கும் செய்ய முடியாது. உதாரணமாக, கல்லீரல் புற்று நோய்க்கு, லிவரை மாற்றி வைக்கலாம். மார்பகம் மற்றும் நுரையீரல் புற்று நோய்க்கு, மாற்றி வைக்க முடியாது. ரத்த வகை புற்று நோய்க்கு, ஸ்டெம்செல் மாற்றம் செய்யலாம்.

ஆனால், இதை எல்லாம் செய்தால், திரும்ப வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.புற்றுநோய் சிகிச்சையில், ஏற்பட்டுள்ள சமீபகால முன்னேற்றம் என்ன?புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு முறை சிகிச்சை, ஹீமோதெரபி சிகிச்சை என, மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. ஹீமோதெரபியில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. 

கதிர் வீச்சு சிகிச்சையில், நவீன கருவிகள் வந்துள்ளன. சர்ஜரியில் ரோபோட்டிக் சர்ஜரி வந்துள்ளது.ஏழைகளுக்கு புற்றுநோய் வந்தால், அவர்களால் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியுமா?அரசு மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சை வசதிகள் உள்ளன. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment