Breaking

Wednesday, August 26, 2020

உடல் எடையை குறைக்க உதவும் எலுமிச்சை


உடல் எடையை குறைப்பதற்கு எலுமிச்சை சாறு நல்ல பலனை கொடுக்கக் கூடியது.

உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் இயற்கை முறையையே பின்பற்றலாம். அதற்கேற்ற உணவுகள், உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் எளிதான, சரியான தீர்வு எலுமிச்சைதான். 

இதற்கு நீங்கள் அதிக பணமோ, நேரமோ செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எலுமிச்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். எலுமிச்சை சாறில் குறைந்த அளவிலான கலோரிகளே காணப்படுகின்றன. அதனால் மற்ற பானங்களை விட இது உடலுக்கு சிறந்தது.

எலுமிச்சை சாறு:

சூடான அல்லது குளிர்ந்த நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் அதில் புதினா இலைகள், சிறிய துண்டு இஞ்சி அல்லது தேன் கலந்து கொள்ளலாம். இல்லையென்றால் எலுமிச்சை சாறு மட்டும் கலந்து குடிக்கலாம். குளிர்ந்த நீரை விட சூடான நீர் இன்னும் அதிக பலனை தரும்.

இதன் பிற பயன்கள்:

உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் எலுமிச்சை நல்லது.

தலைசுற்றல், வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி கிடைக்க இது உதவும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் பண்பும் இதற்கு உண்டு.

எலுமிச்சை சாறை நீரில் கலந்து வாயில் ஊற்றி கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

No comments:

Post a Comment