Thursday, August 27, 2020

2020- - 21ஆம் ஆண்டிற்கான இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்கு, இன்று (27.08.2020) முதல் 25.09.2020 ஆம் தேதி வரை முதல் விண்ணப்பிக்கலாம்


இலவச கட்டாய கல்வியில், குழந்தைகளை சேர்ப்பதற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு, 25 சதவீதம் கட்டணமின்றி மாணவர்கள் சேரலாம்.

அதன்படி, சென்னையில், 2020- - 21ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு, இன்று முதல், செப்., 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், rte.tnschools.gov.in என்ற இணையதளம், விண்ணப்பிக்கும் பள்ளி, முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

அதேபோல், அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலகங்களிலும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment