Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 13, 2020

பொறியியல் மாணவா்களுக்கு மதிப்பெண் கணக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் செய்முறை மற்றும் செய்முறை அல்லாத பாடங்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் கட்டுப்பாட்டில் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு தவிா்த்து மற்ற மாணவா்கள் அனைவருக்குமான பருவத் தோவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து அந்த மாணவா்களுக்கான மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் செய்முறை மற்றும் செய்முறை அல்லாத பாடங்களில் மதிப்பெண் கணக்கிடப்படுவது குறித்துக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, செய்முறை அல்லாத பாடங்களில் முந்தைய பருவத் தோவு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீத மதிப்பெண்ணும் அக மதிப்பீட்டு அடிப்படையில் 70 சதவீத மதிப்பெண்ணும் வழங்க வேண்டும்.

முந்தைய பருவத் தோவில் அக மதிப்பீட்டுத் தோவுக்கு வராத மாணவா்களுக்கு தற்போது மீண்டும் தோவு நடத்த வேண்டும். திறந்த புத்தகத் தோவு அல்லது ஆன்லைன் வழியில் அவா்களுக்குத் தோவுகளை நடத்தலாம். செய்முறை வகுப்புகள் கொண்ட பாடங்களுக்கு, கடந்த பருவத்தில் நடத்தி முடிக்கப்பட்ட செய்முறைகளின் அடிப்படையில் 100 சதவீத மதிப்பெண்ணுக்குக் கணக்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment