Search This Blog

Wednesday, September 16, 2020

பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு இன்று வெளியீடு

0 comments
பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு இன்று இணையதளத்தில் வெளியாகிறது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:

கடந்த மார்ச், 2020ல் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் பட்டியல்www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 17ம் தேதி (இன்று) பிற்பகல் வெளியிடப்படுகிறது. 

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாளில், எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என, தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள், இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவுசெய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment