Subscribe Us

Saturday, September 19, 2020

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு மற்றும் தனித்தேர்வர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு

தேர்வு எழுத வந்திருப்பவர்கள் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்திருந்தால் தேர்வு எழுதும் அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு மற்றும் எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஆகியவை செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுத போகும் போது தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு சென்றிருந்தால் அவற்றை தேர்வு எழுதும் அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுபோல் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு களில் பங்கு பெறும் மாணவர்கள் தங்கள் உடன் தண்ணீர் பாட்டில் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை எடுத்துச் செல்லவும் மற்றும் கிளவுஸ் போன்றவற்றை அணிந்து தேர்வு எழுதவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தேர்வு எழுதும் மையத்திற்கு முகக்கவசம் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு முக கவசம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed