Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 19, 2020

இறுதியாண்டு தேர்வு எழுதுவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு தேர்வுகள் அனைத்து தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக மாணவர்கள் அவரவர் விருப்பப்படியே எழுத வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின்படி, இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களை எல்லாம் பார்த்து தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலமாக கேள்விக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதிலளிக்க இம்முறை வழிவகை செய்யும் என்று மாணவர்கள் தங்கள் புத்தகங்களை பரிமாறாமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் மாணவர்கள் A4 வெள்ளைத்தாளில் கருப்பு(black) மை கொண்டே பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment