Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 24, 2020

அக்டோபர் 2-வது வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு?

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகளை அக்டோபர் மத்தியில் வெளியிட என்டிஏ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 90 சதவீதத்தினர் தேர்வில் பங்கேற்றனர். நாடு முழுவதும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), நீட் தேர்வை நடத்தியது.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ்) என அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்து முடிந்த தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு விடைகள் பட்டியல் மற்றும் விடைத்தாள் நகல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது செப்.28-ம் தேதி www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மாணவர்களிடம் இருந்து கருத்து கேட்டபிறகு இறுதி விடைகள் பட்டியல் வெளியாகும். இதை வெளியிட்டவுடன் அக்டோபர் 2-வது வாரத்தில் நீட் தேர்வு முடிவை வெளியிட, தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment