Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 6, 2020

பெற்றோர்களே விண்ணப்பித்து விட்டீர்களா? 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, வரும் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணத்தை செலுத்துகின்றன.

ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை இணையத்தளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் உள்ள 1.15 லட்சம் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி வரை இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment