JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, September 6, 2020

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல- பள்ளி கல்வித்துறை

தனியார் பள்ளிகளின் மாணவவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது. ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது.

அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார்களை grienvancesredressaltnpta@gmail.com என்ற மினனஞ்சல் முகவரில் பெற்றோர்கள் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment