Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 25, 2020

வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகைதொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு புதிய நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அங்கீாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெறும் தொழிலாளர்கள் மற்றும் சார்ந்தவருக்கு தையல் இயந்திரம் வாங்க உதவித் தொகை, பள்ளிகளில் படிக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மாதிரி வினாத் தாள் மற்றும் பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.

உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதுபவருக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டங்களில் பயனடைய தொழிலாளர்களின் மாத ஊதிய உச்சவரப்பு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ. 25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment