Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 19, 2020

உரிய கல்வித் தகுதி உள்ள பகுதிநேர சிறப்பாசிரியர்களை மட்டுமாவது பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கலையாசிரியர் நலச் சங்கம் வேண்டுகோள்!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகுதி நேர ஆசிரியர்கள் 16,549 பேர்களை 110 ஆவது விதியின் கீழ் நியமித்தார். 
ஓவியம் , உடற்கல்வி , தொழில் கல்வி என மூன்று பிரிவுகளில் இவர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ரூ .5 ஆயிரமாக இருந்த ஊதியத்தையும் அவர் ரூ .7 ஆயிரமாக உயர்த்தினார். அவருக்குப் பிறகு பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 2017 இல் ரூ.700 மட்டுமே ஊதியம் உயர்த்தப்பட்டது. 

தகுதியுள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , பகுதி நேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் . தற்போது அறிவித்திருக்கிறார். 

இது கண்டனத்துக்குரியது. அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment