Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 21, 2020

ஆசிரியருக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை

'நடப்பு ஆண்டு ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்த, உடனடியாக உத்தரவிட வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், நிதித்துறை துணை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அரசு ஊழியர்களின் பொது இடமாறுதல் என்பது, ஏப்., 1 முதல், மே 31 வரை நடப்பது வழக்கம். நடப்பு ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலையில், இடமாற்றம் தொடர்பான பயணச் செலவுகளை குறைப்பதற்காக, மாறுதல் செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், நிர்வாக வசதிகளுக்கான பணியிட மாற்றம், பரஸ்பரமாக பணியாளர்கள் இடமாறுதல் செய்து கொள்வது ஆகியவை, அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு, ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக, ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்று, மாறுதல் பெற்ற ஆசிரியர்களை கவலையடைய செய்துள்ளது. ஏற்கனவே, ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் மற்றும் விடுப்பு சரண்டர் பணப்பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, பொதுமாறுதல் கலந்தாய்வு, இணைய வழியிலேயே நடத்தப்பட்டது.

நடப்பு ஆண்டில், கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு மூலம், அரசுக்கு எந்த ஒரு செலவும் ஏற்படாது. தமிழக முதல்வர், இப்பிரச்னையில் தலையிட்டு, ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment