JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை யு.பி.எஸ்.சி மாற்றியது. தற்போது புதிய அட்டவணையின்படி, இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்று சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த சிவில் சர்வீசஸ் தேர்வர்கள், யுபிஎஸ்சி upconline.nic.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று அவர்களின் யுபிஎஸ்சி ஹால் டிக்கெட்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் தேர்வு நாள் வரை இணையதளத்தில் கிடைக்கும். இதற்கிடையில், தேர்வர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப அதை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment