JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நான்காம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், சில மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியது.
எனினும், இந்த மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பான அட்டவணை குறித்து பள்ளிகள் தகவல் அனுப்பி வருவதாக, பெற்றோர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
செப்டம்பர் 21 அல்லது 23 ஆம் தேதிகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்ள சில சுயநிதி கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள், ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்து கல்வி துறை, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த உத்தரவ்ய் அல்லது அறிவுறுத்தலை வெளியிடவில்லை என்று கூறியது.
No comments:
Post a Comment