Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 28, 2020

பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் சந்தேகம் கேட்க மட்டுமே வரலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. 

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ம் தேதி பள்ளிக்கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன்தான் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment