Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 3, 2020

இறுதி செமஸ்டர் தேர்வு முறையில் திடீர் மாற்றம்! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு உள்ள செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தமிழக அரசு ரத்து செய்தது. அதில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் பருவத்தேர்வு மட்டும் கண்டிப்பாக நடைபெறும் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

மேலும், அரியர் தேர்வுகள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

இதற்கிடையே, இந்த இறுதி ஆண்டுக்கான ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 15ம் தேதிக்குப் பின் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதலாம் எழுத ஏற்பாடு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன், ஆஃப் லைன் என இரு முறைகளிலும் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும். இதனை அந்தந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளே முடிவு எடுக்கலாம் என்றும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment