JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமை்சசர் செங்கோட்டையன் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் சுமார் 3800 மையங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுந்த உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 238 தேர்வு மையங்களில் நீட் தேர்வானது நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். மேலும் தீவிர சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment