Search This Blog

Saturday, September 26, 2020

முதல்வரின் தலைமையில் ஆலோசனை.. விரைவில் அதிகாரபூர்வ தகவல்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.!

0 comments
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் வைத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மத்திய அரசின் பள்ளிகள் திறப்பது தொடர்பான விஷயம், தமிழகத்தின் சூழ்நிலையை பொறுத்தே ஏற்றுக்கொள்ளப்படும். முதல்வரின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு தொடர்பான அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்.

பள்ளிகள் திறப்பு தொடர்பான விஷயத்தில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. வரும் 28 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், அனைவருக்கும் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில், நீதிமன்றத்தில் உத்தரவினை பின்பற்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது " என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment