Breaking

Saturday, September 12, 2020

உடல் எடையால் அவதியா? அப்போ நெல்லிக்காய் சாறு சாப்பிடுங்கள்


நெல்லிக்காய் சாறு உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. உடலின் நீர் சத்தினை அதிகரிக்க உதவுகிறது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும், செரிமானத்தைக் தூண்டும், சிறுநீர் பெருக்கும், குடல் வாயுவை அகற்றும். மேலும், பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

தேவையானவை:

நெல்லிக்காய் - 10

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - சிறிதளவு

சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு, அத்துடன் தண்ணீரைத் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வடிகட்ட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறினால், நெல்லிக்காய் சாறு தயார். இதில் உள்ள வைட்டமின்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

1 comment: