Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 12, 2020

தாம்பூலம் தரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தமிழர்களின் பாரம்பரியத்தில் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டு வந்தது. விருந்துகள் மற்றும் வெளியிடங்கள், உறவினர்களின் வீடுகளில் சென்று உணவருந்தும் போது வெற்றிலை போடும் பழக்கம் கடைப்பிடிக்கபட்டு வந்தது.

எளிமையான உணவு நிம்மதியான உறக்கம், கடினமான உடல் உழைப்பும் நம் தமிழர்களிடம் இருந்து வந்தது.

தற்போது நாகரீகம் காரணமாகவும், அதில் உள்ள நன்மைகளைப் பற்றி முற்றிலும் அறியாததாலும் அவைகளை மறந்து வருகிறோம். .

வெற்றிலையில் உள்ள காம்பு, நரம்பு நடுத்தண்டு நீக்கி பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போட வேண்டும். அதில் முதல் மற்றும் இரண்டாவது சுரக்கும் உமிழ்நீரை கீழே துப்பி விட்டு அடுத்து வருவதை உள்ளுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருந்துகளில் தாம்பூலங்கள் வைக்கப்பட்டதன் காரணம் குடிநீர் மாற்றத்தினால் தொண்டை சார்ந்த நோய்கள் உருவாவதை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

தாம்பூலம் தரிக்கும் முறை மூன்று வேளைகளிலும் மாறுபடும்.காலையில் போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக சேர்ப்பதால் உடலில் பித்தம் உருவாவதை தடுக்கலாம்.

மதியம் சுண்ணாம்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் வாயுவை கட்டுப்படுத்தலாம்.

இரவு தாம்பூலத்தில் வெற்றிலையை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் நெஞ்சில் கபம் சேர்வதைத் தடுக்க முடியும். இதனை முறையாக கடைப்பிடித்து தாம்பூலம் தரித்து வர உடலில் உள்ள கால்சியக் குறைபாடுகளை சீராக்கி செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது.

No comments:

Post a Comment