Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 18, 2020

பள்ளிக்கல்வி இயக்குநகரத்திற்கு புதிய கட்டிடம் , நாளை திறப்பு.

சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் புதிய கட்டடம், நாளை திறக்கப்படுகிறது. 

தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரகம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. இந்த வளாகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநுால் கழகம், அரசு தேர்வுத் துறை இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தொடக்க கல்வி இயக்குனரகம், பள்ளி இயக்குனரகம், மெட்ரிக் இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டடம், 100 ஆண்டுகள் பழமை யானது என்பதால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, டி.பி.ஐ., வளாகத்தில் காலியாக இருந்த, 1.23 லட்சம் சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில், 40 கோடி ரூபாய் செலவில், ஆறு மாடிகள் உடைய புதிய கட்டடம் கட்டும் பணி, 2018 மார்ச்சில் துவங்கி, 2019 டிசம்பரில் முடிந்தது.ஆனாலும், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கட்டட திறப்பு தள்ளிப்போனது. வரும், 19ம் தேதி புதிய கட்டடத்தை, முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்ஸ் முறையில், திறந்து வைக்க உள்ளார். 

இந்த கட்டடத்துக்கு, 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மாளிகை' என, பெயர் சூட்டப்படுகிறது. இந்த கட்டடத்தில், பள்ளிக் கல்வி இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment