THAMIZHKADAL TODAY NEWS

சர்க்கரை நோய், ரத்தப்போக்கு கட்டுப்படுத்தும் அதிவிடயம் பூ

மலைப்பகுதிகளில் அதிக அளவில் வளரும் குருஞ்செடியான அதி விடயம், அளவில் பெரிய இலைகளையும், நீல வண்ணத்தில் மிளிரும் மலர்களையும் கொண்டது. 

வெண்ணிற சதைப் பற்றைக் கொண்ட, அதி விடயத்தின் சாம்பல் வண்ண வேர்களே, மிக்க மருத்துவப் பலன்களைத் தருவதாகத் திகழ்கின்றன

அதிவிடயம் கடுக்காய் ஓமம் மூன்றையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் 5 கிராம் எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட பேதியும் உடனே நிற்கும்.
அதிவிடயம் நாவல் கொட்டை வகைக்கு நூறு கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் இரண்டு கிராம் எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தப்போக்கு உடனே நிற்கும்

அதிவிடயம் ஆவாரம் பூ கடுக்காய் வகைக்கு நூறு கிராம் எடுத்து சூரணம் செய்து கொள்ளவும் இதில் இரண்டு கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்

அதிவிடயம் எள் வெள்ளரி விதை வகைக்கு 100 கிராம் வீதம் எடுத்து சூரணம் செய்து இதில் இரண்டு கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.

அதி விடயத்தை தண்ணீரில் போட்டு கசாயம் காய்ச்சி அதை புண்கள் மீது தடவினால் புண்கள் விரைவில் ஆறும்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel