அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:468
குறள்:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
பொருள்:
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .
2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி -நெல்சன் மண்டேலா
Thought for the Day :
Hard work today brings success tomorrow.
பொது அறிவு :
1. மனித உடலில் உள்ள இரத்தத்தின் pH மதிப்பு என்ன?
7.35-7.45.
2. தூய மழை நீரின் pH மதிப்பு என்ன?
5.6
English words :
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
MAT
ஆப்பிள் "தக்காளி " எனவும், தக்காளி "சோப்" எனவும், சோப் "தேன்" எனவும், தேன் "மை" எனவும் அழைக்கப்பட்டால் பின்வருவனவற்றுள் குளிப்பதற்கு பயன்படுத்துவது எது?
(1) தேன்
(2) தக்காளி
(3) சோப்பு
(4) மை
விடை: (1) தேன்
ஆகஸ்ட் 10
நீதிக்கதை
விட்டுக்கொடுப்பதே வெற்றியின் வழி
ஒரு சிறிய குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன் அருண், மகள் காவ்யா ஆகியோர் வசித்து வந்தனர்.
ஒரு நாள் மாலை , அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, குழந்தைகள் இருவருக்கும் பிடித்தமான ஒரு பெரிய கேக் வாங்கி வந்தார்.
“இதை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அப்பா வெளியே சென்றார்.
அருணுக்கும் காவ்யாவுக்கும் கேக்கின் பெரிய துண்டு வேண்டும் என்று ஆசை . இருவரும் ஒரே துண்டை எடுத்துக்கொள்ள முயன்றதால், சிறிய சண்டை ஏற்பட்டது.
அதைப் பார்த்த அம்மா,
“நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்தால் இந்தப் பிரச்சினை உடனே தீர்ந்துவிடும்”என்றார். ஆனால் இருவரும் கேட்கவில்லை .
சிறிது நேரம் கழித்து, காவ்யா யோசித்தாள். “நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன? என் தம்பியும் சந்தோஷமாக இருப்பானே !” என்று நினைத்து, பெரிய துண்டை அருணிடம் கொடுத்தாள். அதைப் பார்த்த அருணுக்கு மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
“நீ எனக்காக விட்டுக்கொடுத்தாய். எனக்கும் உனக்காக விட்டுக்கொடுக்கத் தெரியும்” என்று கூறி, அந்தப் பெரிய துண்டை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை காவ்யாவிடம் கொடுத்தான்.
இருவரும் சேர்ந்து கேக்கை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
அதைப் பார்த்த அம்மா சிரித்துக்கொண்டே ,
“விட்டுக்கொடுப்பதால் நாம் எதையும் இழப்பதில்லை . மாறாக, அன்பையும் மகிழ்ச்சியையும் பெறுகிறோம்” என்றார். அன்று முதல் அருணும் காவ்யாவும் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழத் தொடங்கினர்.
அவர்களின் வீடு எப்போதும் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறியது.
நீதி:
விட்டுக்கொடுப்பது தோல்வி அல்ல; அது உறவுகளை வலுப்படுத்தும் வெற்றியின் அடையாளம்.
இன்றைய செய்திகள்












No comments:
Post a Comment