Subscribe Us

Sunday, September 13, 2020

அண்ணா பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் எல்லா துறைகளையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அதில் பள்ளி, கல்லூரிகளும் அடங்கும். இதனால் ஏப்ரல், மே மாதத்தில் நடக்க இருந்த இறுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இறுதித் தேர்வு எழுதுபவர்கள் தவிர அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. அதே நேரத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கூறியிருந்தது.

இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் - மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .

செய்முறைத் தேர்வுகள் வரும் 22 ஆம் தேதி தொடங்கும். 

எழுத்துத் தேர்வுகள் 24ஆம் தேதி முதல் நடைபெறும். 

இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed