Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 19, 2020

CIVIL SERVICE EXAM : சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றமா? மத்திய அரசு பதில்

சிவில் சர்வீசஸ் தேர்வு முறையில் மாற்றம் வருகிறதா? என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடத்துகிறது.

முதல் நிலை தேர்வில் ‘ஆப்டிட்யூட்’ என்னும் திறனாய்வு சோதனை (சிசாட்) இடம் பெற்று வருகிறது. இந்த திறனாய்வு தேர்வை கைவிட மத்திய அரசு திட்டம் வைத்துள்ளதா என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு, இல்லை என்று பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துமூலம் பதில் அளித்தார்.

நேர்முக தேர்வு நடத்துவதற்கு பதிலாக உளவியல் தேர்வை கொண்டு வருதல் உள்பட சிவில் சர்வீசஸ் தேர்வு முறையை அரசாங்கம் மாற்றப்போகிறதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கும் ஜிதேந்திர சிங் இல்லை என்றே பதில் அளித்தார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலைமை காரணமாக, 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு அடுக்கு 3-ன் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முடிவை கூடிய விரைவில் அறிவிப்பதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என கூறினார்.

No comments:

Post a Comment