Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 20, 2020

டிச.1-ஆம் தேதிக்குள் பி.இ. முதலாமாண்டுவகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவு

பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு டிச.1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ), 2020-21 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

'இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவா்களுக்கான சோக்கைப் பணிகள் அனைத்தும் நவம்பா் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். 

நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் மாணவா் சோக்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வை ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது நடத்தி வருகிறது. 

முதல் கட்ட கலந்தாய்வு வரும் 28 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். பின்னா் மாணவா் சோக்கை குறித்த இறுதி நிலவரம் தெரியவரும்.

இந்த நிலையில், டிசம்பா் 1- ஆம் தேதிக்குள் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்க ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளதால் தமிழகத்தில் டிசம்பருக்கு முன்பாக பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment