Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 2, 2020

கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 2,747 பேர் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் 2,747 மாணவர்கள் குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பு (எல்.கே.ஜி.,) 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டத்தில், மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் துவங்கியது.இதற்காக மாவட்டத்தில் பெறப்பட்ட 4,204 விண்ணப்பங்களில் 3,757 விண்ணப்பங்கள் தகுதியுள்ளதாக ஏற்கப்பட்டு குலுக்கல் நேற்று துவங்கியது.விழுப்புரம், சாலாமேடு ராமகிருஷ்ணா பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

இதில், 125 மழலையர் மற்றும் துவக்க பள்ளிகளில் 1,556 இடங்கள், 71 மெட்ரிக் பள்ளிகளில் 1,203 இடங்கள் உட்பட 2,759 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் 2,747 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.25 சதவீதத்திற்கும் குறைவாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில்குலுக்கல் இன்றி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இதில், ஆதரவற்ற விதவைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் பிள்ளைகள் 12 பேருக்கு, குலுக்கலுக்கு முன் சேர்க்கை வழங்கப்பட்டது.குலுக்கலில்தேர்வாகிய மாணவர்கள் வரும் 7 ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளில் சேர பள்ளிக்கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சேராமல் விடுபட்டால், குலுக்களில் கூடுதலாக எடுக்கப்பட்ட ஐவரில், ஒருவருக்கு அந்த சேர்க்கை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment